குடிநீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் நாளை திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அதிமுக அரசை கண்டித்து வருகிற 22ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள் ளது.

அதில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காத தமிழக அரசை கண் டித்து இம்மாதம் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?, நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக அரசுக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதி முக அரசு அடாவடியான பேட்டி களில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை எடுக்க முன்வரவில்லை.

“தண்ணீருக்காக காலிக்குடங் களுடன் அலையும் தாய்மார்களை யும் ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொதுமக்களை கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும் முதல்வரும் அமைச்சர்களும் பேட்டியளித்து வருகிறார்கள்.

“உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண் ணீரின்றி தவிப்பது, ஐ.டி. கம் பெனிகள் ஊழியர்களை வீட்டி லிருந்தே பணிபுரிய உத்தர விட்டிருப்பது, பல தங்கும் விடுதி கள் மூடப்படுவது என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி சென்னை மாநகர மக்களும் தமிழகமெங்கும் உள்ள மக்களும் தினம் தினம் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன் னலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் கடமை தவறிய அதிமுக அரசு கண்ணை மூடிக்கொண்டிருப் பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.

“ஆகவே அதிமுக அரசின் அலட்சியத்தையும் முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச் சர் ஆகியோரின் நிர்வாகப் படு தோல்வியையும் கண்டிக்கும் வகையிலும் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டு மென வலியுறுத்தியும் வருகிற 22ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங் களிலும் கட்சியின் மாவட்ட செய லாளர்கள் தலைமையில் பொது மக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழியில் நடத்தப்படும்,” என்று அறிக்கையில் திமுக தலைமை கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!