சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி கூறுகையில், "இந்த ஆண்டு மழை குறைவாகப் பெய்த தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந் துள்ளதால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளுமே வறண்ட நிலை யில் இருக்கிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். எங்கெல் லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம் குடி நீரை சரியாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பழனிசாமி, தண்ணீர்ப் பிரச்சினையைச் சரிசெய்ய மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள தாகக் கூறினார்.
ஆந்திராவின் கிருஷ்ணா நிதியில் இருந்தும் தண்ணீர்க் கிடைக்க வில்லை என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கேரள அரசு தண்ணீர் வழங்க முன்வந்துள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடிப் பழனிச்சாமி, அதற்கு கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவுத் குறிப்பிட்டார். நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் கேரள அரசு தண்ணீர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும், இதற்காக கேரள அரசுக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.

