ரூ.8 லட்சம் தங்கம், வைர நகையோடு தப்பியோடிய அழகிக்கு வலைவீச்சு

ரூ.8 லட்சம் தங்கம், வைர நகையோடு தப்பியோடிய அழகிக்கு வலைவீச்சு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளோடு தப்பி ஓடிய அழகியை போலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியைச் சேர்ந்தவர் ராதா, 60. இவர் கை, கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு 'பிசியோதெரபி' மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. இதற்கிடையே கடந்த இரு வாரங்களாகச் சௌமியா என்ற மசாஜ் அழகி தினமும் ராதாவின் வீட்டிற்கு வந்து அவரது கை, கால்களுக்கு மசாஜ் செய்து சிகிச்சை அளித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு சௌமியா வழக்கம்போல ராதாவுக்குச் சிகிச்சை அளித்து விட்டுச் சென்றார்.

மசாஜ் செய்யும்போது தான் அணிந்திருக்கும் தங்கம், வைர நகைகளை ராதா அருகில் உள்ள மேசைமீது கழற்றி வைப்பது வழக்கம். அவ்வாறு கழற்றி வைத்த நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் சௌமியா.