சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள குயீன்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 18ஆம் தேதி ஃபிரீ ஃபால் எனும் ராட்டினத்தின் கம்பி அறுந்து விழுந்தது.
இந்த விபத்தில் ராட்டினத்தில் பயணித்த 12 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்நிலையில் வயர் அறுந்து ராட்டினம் விழும் காணொளிக் காட்சிகள் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதைத் தொடர்ந்து இப்பூங்காவை தற்காலிகமாக மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

