பத்து குழந்தைகளைப் பாதிரியார் விற்பனை செய்தது அம்பலம்

பத்து குழந்தைகளைப் பாதிரியார் விற்பனை செய்தது அம்பலம்

1 mins read

ராசிபுரம்: ராசிபுரத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியாரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாகச் செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் அரியலூரை அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னுசாமி கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பலரிடம் விற்பனை செய்தது ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.