தனுஷ்கோடி: தனுஷ்கோடியில் 1964ஆம் ஆண்டு, புயலால் சேதமாகி கடலுக்குள் மூழ்கிப்போன சாலைப் பாலம் 55 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியில் தெரிகிறது. இப்பாலத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.
கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலையில் தாக்கிய புயலில் தனுஷ்கோடி நகரம் முழுமையாக அழிந்துபோனது. அதிகாலையில் நடந்த இந்தக் கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர். இந்தப் புயலில் எம்.ஆர்.சத்திரம்-தனுஷ்கோடி இடையே அமைக்கப்பட்டிருந்த சாலைபாலம் கடலில் அடித்துச் செல்லப்பட்டுக் கடல் நீரில் மூழ்கிபோனது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைக் காட்டிலும் பலத்த சூறாவளி காற்று வீசுவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அத்துடன் சாலைப் பாலமும் தற்போது தெளிவாக வெளியே தெரிகிறது. படம்: தமிழக ஊடகம்

