கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள்

கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள்

1 mins read
1af8743e-6242-4940-8c67-680ddf89d5f8
கிராம மக்கள் சாலையோரங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வடி கட்டி குடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள னர். இந்நீரை எடுப்பதற்குக்கூட அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வரவேண்டும். நாங்கள் படும் பாட்டை புரிந்துகொள்ள யாரு மில்லை என்கின்றனர் மக்கள். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தண்ணீர்ப் பஞ்சத்தின் காரணமாக பொது மக்கள் கழிவுநீரை வடிகட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீரை அவர்கள் அடுப்பில் வைத்து காய்ச்சி குடித்தாலும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகின்றனர்.

மக்களின் இந்த அவல நிலையைப் போக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி கள் ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வலையங்குளம் கிராமம் உள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தக் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருந்தும் அன்றாடம் உபயோகிக் கும் உப்புத் தண்ணீருக்குக் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதி காரிகள் யாரும் கண்டுகொள்ள வில்லை.

அத்துடன் குடிநீருக்காக தண் ணீர் எடுக்கவேண்டும் என்றால் 4 வழிச்சாலை அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்குத் தான் செல்லவேண்டும்.

இங்கு செல்வதற்கு 5 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவேண் டும். எனவே ஆண்கள் தினந் தோறும் இருசக்கர வாகனங் களில் குடங்களைத் தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவதையே முழுநேர வேலை யாக செய்துவருகின்றனர்.