இன்று நான்கு மாவட்டங்களில் மழை; அனல்காற்று குறையும்

இன்று நான்கு மாவட்டங்களில் மழை; அனல்காற்று குறையும்

1 mins read

சென்னை: தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்த நிலையில், கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஜூன் 22 பலத்த மழை பெய்யும் என்றும் அதேவேளையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் உள்ளிட்ட சில வட மாவட் டங்களில் இன்று (ஜூன் 22) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையும்.

"தற்போது, தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமாவில் ஆந் திர கடற்கரை பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.

"நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

"சென்னையிலும் அதை ஒட்டி யுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்ப நிலை குறையும்," என்று கூறி னார்.

சென்னை, காஞ்சிபுரம் உள் ளிட்ட 13 வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அத்துடன் கடுமையான தண் ணீர் தட்டுப்பாடும் நிலவியதால் சென்னைவாசிகள் மழையை எதிர்நோக்கி காத்துள்ளனர்.