சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாங்கியிருந்த ரூ.5.52 கோடி கடனை முறைப்படி உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தாததால் அவரது வீடும் பொறியியல் கல்லூரியும் ஏலம் விடப்பட உள்ளன.
இந்த அறிவிப்பை செய்தித் தாட்களில் விளம்பரமாக வெளி யிட்டுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
இதைப் பார்த்து தேமுதிக கட் சியைச் சேர்ந்த மற்ற பிரமுகர்களும் தொண்டர்களும் அதிர்ந்தனர்.
வங்கி வழங்கிய கடன் நிலுவைத் தொகை, வட்டி, இதர செலவுகளை விஜயகாந்த்தின் வீடு, கல்லூரியை ஏலம் விடுவதன் மூலம் வசூலிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிரடி முடிவு எடுத்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்துக்குச் சொந்தமான 4,651 சதுர அடி கொண்ட வீடு, மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விடப்பட உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணா சாலை கிளை நேற்றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்றும் விளம் பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவச திருமண மண்டபம், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி என பல நலத் திட்டங்களையும் மக்களுக்குச் செய்த கேப்டன் விஜயகாந்துக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பி வருகின்றனர் தேமுதிகவின் உண்மை விசுவாசிகளும் அவ ருக்கு நெருங்கிய அபிமானிகளும்.
ஒருகாலத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற் போது அவரது நிலை கண்டு பல ரும் வேதனை அடைந்துள்ளனர்.

