சென்னை: மாணவர்களின் உடலுறுதி யையும் ஆரோக்கியத்தையும் மேம் படுத்த அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தில் ஒருநாள் யோகா பயிற்சி களைக் கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாக கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஒய்எம்சிஏ மைதா னத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது. மத, மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்கவேண்டும். யோகா கற்றுத்தர 13,000 பயிற்சி யாளர்கள் தயாராக உள்ளனர். விரை வில் யோகா பயிற்சித் திட்டம் செயல் படுத்தப்படும்," என்றார்.
தமிழிசை சௌந்தரராஜன் கூறு கையில், "நம் நாட்டின் கலை இன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. உடல், மன நலக்கானது யோகா. யோகா மதம் சார்ந்தது அல்ல. மனிதம் சார்ந்தது," என்றார்.
அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (வலமிருந்து இரண்டாவது), தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடிகை தன்ஷிகாவும் பங்கேற்றார். பல்வேறு யோகாசனங்களையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் செய்தனர். படம்: தமிழக ஊடகம்

