சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு காலத்தில் கள்ளக்காதல் தொடர்பில் 1,311 கொலைகள் நிகழ்ந்து இருக்கின்றன என்று உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றில் போலிஸ் துறை தெரி வித்து உள்ளது.
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பில் சென்னையில் அண் மையில் ரவுடி ஒருவர் கொல்லப்பட் டார். அவரைக் கொலை செய்த வேறு ஒரு ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார். அதை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்காதல் விவ காரம் தொடர்பான கொலைகள் பற்றிய விவரங்களை நீதிமன்றத் தில் தாக்கல் செய்யும்படி போலிஸ் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அந்த உத்தரவின்படி, போலிஸ் துறை நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.
சென்னையில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 158 பேர் கள்ளக் காதல் விவகாரம் தொடர்பில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் கள் என்று அந்த அறிக்கை தெரி விக்கிறது.
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண் டில்தான் ஆக அதிகமாக 138 பேர் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பில் கொலையுண்டனர்.
கள்ளக்காதல் கொலைகள் ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 621 கொலை சம்பவங்களும் சென் னையில் 213 கொலை சம்பவங் களும் நிகழ்ந்து இருப்பதாகவும் போலிஸ் தெரிவித்து இருக்கிறது.
இதனைச் செவிமடுத்த நீதிபதி கள், தாங்கள் கேட்ட 25 கேள்வி களுக்கும் பதில் தாக்கல் செய்யப் படவில்லை என்றும் மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கு முழுமையான விவரங்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
பாலியல் பலாத்கார விவகாரங் களில் குறிப்பாக சிறார்களுக்கு எதிரான பாலியல் விவகாரங்களில் ஆபாசப் படங்கள் முக்கிய இடத் தைப் பெறுவதாகக் குறிப்பிட்ட நிதிபதிகள், அது பற்றி விசாரணை நடத்தி போலிஸ் அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தாங்கள் விசா ரித்துவரும் வழக்கை அடுத்த மாதம் 5ஆம் தேதிக்கு அவர்கள் தள்ளிவைத்தனர்.

