சட்டசபைக்கு வரும் ஐந்து விவகாரங்கள்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றம் இம்மாதம் 28ஆம் தேதி கூடு கிறது. அந்தக் கூட்டத்தில் ஐந்து விவகாரங்களைக் கிளப்பி ஆளும் கட்சியைத் திணறடிக்க எதிர்க் கட்சிகள் திட்டமிடுவதாக ஊட கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபைக் கூட்டத்தின் முதல் நாள் பணிகளை முடிவு செய்வதற்காக அடுத்த வார தொடக்கத்தில் சட்டமன்ற அலு வல் ஆலோசனைக் குழு கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை நாளை 24ஆம் தேதி கூடும் என்று தெரிகிறது. சட்டமன்றக் கூட்டம் ஒரு மாதம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதில் தண்ணீர் பிரச்சினையை மிகவும் முக்கியமானதாக எதிர்க் கட்சிகள் எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற நாயகர் பி தன பாலுக்கு எதிராக நம்பிக்கை யில்லா தீர்மானத்தைத் திமுக தாக்கல் செய்யக்கூடும் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இருந்தாலும் பொறுத்திருந்து பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதால் இத்தகைய ஒரு மசோதா தாக்க லாகுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

காவிரி பிரச்சினை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய நகல் கல்விக் கொள்கை தொடர்பிலான அதிமுகவின் நிலை ஆகியவை எதிர்க்கட்சிகள் மன்றத்தில் எழுப்ப இருக்கும் இதர விவகாரங் களாக இருக்கக்கூடும் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடந்தன.

அவற்றில் திமுக வலுவான வெற்றியைப் பெற்று இருக்கிறது. சட்டமன்றத்தில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக இப்போதுதான் சட்ட மன்றம் கூடுகிறது. எதிர்த்தரப்பு கள் வெற்றிக் களிப்பில் இருப்ப தால் மன்றக் கூட்டம் காரசாரமாக இருக்கும் என்று கவனிப்பாளர் கள் கூறுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!