கோவை: சென்னையில் செயல் படும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் கோயம்புத்தூருக்கு இடமாற திட்டமிடுவதாக பேச்சு தலையெடுத்து இருக்கிறது.
தலைநகரில் 2015ல் மிகப் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்ட போது அந்த நிறுவனங்கள் இதே போன்று இடம் மாற யோசித்த தாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது சென்னையில் கடும் வறட்சி நிலவும் சூழலில் அந்த தொழில்துறை நிறுவனங்கள் கோயம்புத்தூருக்கு இடம் மாறுவது பற்றி விவாதித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீர் பிரச்சினை காரண மாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்த படியே வேலை செய்ய அனுமதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய நிறுவனங்களில் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய தேவை இருக்கும் நிறு வனங்கள், தங்களுடைய ஊழியர் அணியில் ஒரு பகுதியை கோயம் புத்தூருக்கு இடமாற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
கோயம்புத்தூரில் உள்ள சில தொழிற்பேட்டைகளில் குறிப்பிடத் தக்க ஊழியர்களை ஒரு சில மாதங்களுக்கு மாற்றிவிட சில நிறுவனங்கள் விரும்புவதாக இந்தியாவின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரி வித்துள்ளது.
வெள்ளம் அல்லது வறட்சி போன்ற இயற்கை பேரிடரால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் பல நிறுவனங்களும் கோவையை விரும்புகின்றன என்று கோயம்புத்தூர் அருகே சர வணன்பட்டியில் செயல்படும் ஹைடெக் இன்ஃபார்மேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் தொழிற் பேட்டை இயக்குநர் அசோக் பக்தவச்சலம் தெரிவித்தார்.
கோயம்புத்தூரிலும் தண்ணீர் நெருக்கடி இருந்தாலும் அது சென்னை அளவுக்கு இருக்காது என்றும் மாற்று ஏற்பாடுகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

