தனியார் பள்ளிகளுக்கு  தமிழக அரசு எச்சரிக்கை

தண்ணீர்ப் பிரச்சினையைக் காரணம் காட்டி சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளி லும் உள்ள தனியார் பள்ளிகளில் பல பள்ளி செயல்படும் நேரத்தைக் குறைத்திருப்பதாகவும் வேறு சில பள்ளிகள் விடுமுறை அறிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அத்தகைய பள்ளிகளுக்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தண்ணீர்த் தட்டுப்பாடு கார ணமாக பாடம் எடுக்காமல் வகுப் புகளை நிறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

“தண்ணீர்ப் பிரச்சினையைப் போக்க மாற்று ஏற்பாடுகளை எடுக்கவேண்டியது பள்ளிகளின் பொறுப்பு. அதை விடுத்து, பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கக் கூடாது. விதிமுறைகளைப் பின் பற்றாவிடில் சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது கல்வித் துறை கடும் நடவடிக்கை எடுக்கும்,” என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் எச்ச ரித்துள்ளார்.

எல்லாக் காலங்களிலும் போதிய அளவு தண்ணீர் இருப் பதை உறுதிசெய்வோம் என்று அப்பள்ளிகள் அளித்த உத்தர வாதத்தின் அடிப்படையிலேயே அவை செயல்பட அனுமதி வழங் கப்பட்டது என்பதையும் அந்தச் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“தண்ணீர்த் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விடுமுறை அறி விக்காமல் அனைத்துப் பள்ளி களும் தொடர்ந்து இயங்குவதைக் கல்வித் துறையும் மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்,” என்றும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஆனால், தங்களை மிரட் டும்விதமாக இந்தச் சுற்றறிக்கை அமைந்துள்ளது என்று சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன. தண்ணீரின்றி பள்ளிகள் தொடர்ந்து இயங்கி னால் மாணவர்கள்தான் பாதிக் கப்படுவர் என்றும் அவை கூறு கின்றன.

முன்னதாக, தண்ணீர்ப் பற் றாக்குறையால் சில பள்ளிகள் அரை நாள் விடுமுறை அறிவித் திருந்தன. இதைத் தொடர்ந்து, மாநில அரசு இப்படி ஓர் எச்சரிக்கை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

இதனிடையே, சென்னையில் தண்ணீர்க் கலன்களின் விலை கிட்டத்தட்ட பத்து ரூபாய் அதி கரித்துவிட்டதாக தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ஜோலார்பேட் டையில் இருந்து ரயில் மூலம் நாளொன்றுக்கு பத்து மில்லியன் லிட்டர் நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கான பணி கள் இடம்பெற்று வருகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் தண்ணீர்ப் பிரச் சினை ஏற்படாமல் பார்த்துக்கொள் வோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், வேலூரில் இருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவரக்கூடாது என்றும் மீறினால் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் திமுக பொருளாளர் எச்சரித்துள்ளார். அத்துடன், தண்ணீர்ப் பிரச்சி னையைத் தீர்க்கும் வழிகளை ஆராயாமல் அதிமுக அரசு கோவில்களில் யாகங்களை நடத்தி வருவதையும் அவர் கேலி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!