தங்கம் மோசடி: அர்ச்சகர் கைது

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமி சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அந்தக் கோவில் அர்ச்சகர் ராஜப்பா, 87, என்பவர் கனடாவில் இருந்து மும்பை திரும்பியபோது விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை அவரை திருச்சி மத்திய சிறையில் போலிஸ் அடைத்தது. படம்: தமிழக ஊடகம்