கருவைக் கலைக்கச் சென்ற  மாதுக்கு குடும்பக் கட்டுப்பாடு

விருதுநகர்: மதுரை மாவட்டம் மருதங்குடியைச் சேர்ந்த, ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள, 31 வயதுப் பெண் மீண் டும் கர்ப்பமடைந்ததால் கருக் கலைப்புக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். 

  அங்கு கடந்த 12-ஆம் தேதி கருக்கலைப்புக்குப் பதிலாக, அவரிடம் எதையும் தெரிவிக்கா மலேயே, அவருக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்து உள்ளது.

வீடு திரும்பியதும் அப்பெண் ணுக்கு வயிற்று வலி வந்ததால்  அவர் தனியார் பரிசோதனை மையத்திற்குச் சென்றார்.

பரிசோதனையில், அப்பெண் வயிற்றில் கரு கலையாமல் இருந்தது தெரியவந்ததால் மீண் டும் விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது, மருத்துவர்கள் மீண்டும் கருக்கலைப்பு செய்வ தாகக் கூறி அவரை மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவ சிகிச்சைக் குப் பயந்து அவர் இரவோடு இரவாக தப்பியோடிவிட்டார்.

பிறகு அவருடன் அந்த அரசு மருத்துவமனை தொடர்பு கொண்டபோது தனியார் மருத் துவமனைக்குச் சென்று தான் கருவைக் கலைத்துக்கொள்ளப் போவதாக மாது கூறிவிட்டார்.