‘மணமாகும் வரை மகள்களை தந்தையே பராமரிக்கவேண்டும்’

சென்னை: திருமணம் ஆகும் வரை மகள்களைப் பராமரிக்க வேண்டியது தந்தையரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. 

தனக்குத் தன் தந்தை மாதந் தோறும் பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்றும் இதற்குத் தோதாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் 18 வயது பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரி இருந்தார். 

இதை விசாரித்த உயர் நீதி மன்றம், திருமணம் ஆகும் வரை பெண்ணை தந்தைதான் பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி இருந்தார். என்றாலும் அந்த நீதி மன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 

அதைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றம் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.