திருட்டு திருமணம்: கணவர் மனைவியிடம் சிக்கினார்

கும்பகோணம்: அரியலூர் மாவட் டம் உடையார்பாளையம் அருகே வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், 48, என்ற ராணுவ அதிகாரி, 22 ஆண்டுகளுக்கு முன் ஸ்டெல்லா ராணி, 41, என்பவரை மணந்தார். 

 இத்தம்பதிக்கு வயதுவந்த இரண்டு பிள்ளைகள் உண்டு. ஸ்டெல்லா, மகன்களுடன் நாசிக் கில் வசித்து வருகிறார்.  

இந்த நிலையில், முதல் திருமணத்தை மறைத்து சுவாமிமலை முருகன் கோயிலில் நித்யா, 35, என்பவரை சுபாஷ் திருமணம் செய்துகொண்டார். 

யதார்த்தமாக தமிழ்நாடு சுற்றுலா வந்த ஸ்டெல்லா, அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கு தன் கணவரை வேறு ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் பார்த்து திடுக்கிட்டு  உடனடியாக   போலிசில் புகார் செய்தார். சுபாஷ் கைதாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.