பேருந்து கவிழ்ந்து  20 பேர் காயம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சாலையோர பள்ளத்தில் இருக்கும் வாய்க்காலில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில்    20 பேர் படுகாயம் அடைந்தனர்.   

  பாண்டிச்சேரியில் இருந்து காரைக்காலுக்குச்  சென்றுகொண்டு இருந்த  தனியார் பேருந்து, சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமம் வழியாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. 

  படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.