பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்

திருச்சி: திருச்சி அருகே துறையூர், மணப்பாறை, வைய்யம்பட்டி பகுதி களில் பிரசவத்திற்காக பொது சுகாதார நிலையங்களுக்குச் சென்ற கர்ப்பிணிகளைப் போதிய தண்ணீர் இல்லை என்று சொல்லி அந்த நிலையங்கள் அரசாங்க மருத்துவமனைக்குச் செல்லும்படி அனுப்பிவிட்டன. 

இதனால் பரிதவித்துப்போன பல கர்ப்பிணிப் பெண்கள் அங் கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திரும்பிச் செல்ல நேர்ந்தது. 

திருச்சி அருகே உள்ள பகுதி களில் செயல்படும் 11 பொது சுகா தார நிலையங்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக் கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. 

துறையூரில் உள்ள நான்கு நிலையங்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. நிலத்தடி நீரும் இல்லை என்று மக்கள் கவலைபடுகிறார்கள். 

போதிய அளவு தண்ணீர் இல் லாமல் பிரசவம் பார்ப்பது மிகவும் சிரமம் என்று அந்த நிலைய அதிகாரிகள்  தெரிவிக்கிறார்கள். 

இதனிடையே, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் நெருக்கடிக்குத் தீர்வுகாண தமிழக அரசு உருப்படி யான நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று சொல்லி, மாநிலத் தின் பல இடங்களிலும் முக்கிய எதிர்க்கட்சியான திமுக போராட் டங்களை நேற்றுத் தொடர்ந்தது. 

சென்னையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் வருவதற்கு முன்பே இந்த ஆட்சி கவிழப்போகிறது என்றார்.

அதிமுகவினர் மழைக்காக யாகம் நடத்தவில்லை என்றும் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே யாகம் நடத்தி வருவதாகவும்  அவர் குறைகூறினார். 

இவ்வேளையில், நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டிஆர் பாலு, தமிழ்நாடு தண்ணீர் பிரச்சினை பற்றி மசோதா ஒன் றைத் தாக்கல் செய்தார். 

இதனிடையே, திமுக நடத்தி வரும் தொடர் போராட்டம் குறித்து கருத்துரைத்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அவை மக்களிடம் எடுபடாது என்றார். 

கவிஞர் கண்ணதாசனின் 93வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், தமிழ கத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும் பற்றாக்குறைதான் உள் ளது என்றும் கூறினார். 

இவ்வேளையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வாழை இலை வியாபாரிகள், வறட்சி, காற்று காரணமாக வாழை இலை தொழில் 50% பாதிக்கப்பட்டுள்ள தாகக் கூறினர். 

வறட்சி நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று விவ சாயிகளும் வியாபாரிகளும்  கவலை தெரிவித்தனர். 

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

Read more from this section

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கியைக் கட்டுப்படுத்தும் 45 நடமாடும் மருத்துவக் குழுவினர். படம்: ஊடகம்

11 Oct 2019

டெங்கியைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழு