தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை

சென்னை: தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப் பாட்டை சிலர் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்டு சுகாதாரமற்ற நீரை கேன்கள், போத்தல் களில் அடைத்து பரவலாக விற்று பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இப்படி விற்கப்படும் சுகாதார மற்ற தண்ணீரால் உடலுக்குப் பல் வேறு பிரச்சினைகளும் உபாதை களும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சிறிய மளிகைக் கடை முதல் பெரிய பேரங்காடிகள் வரை கேன் களில் அடைக்கப்பட்ட குடிநீர் அமோகமாக விற்பனையாகி வரு கிறது. ஆனால் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத. குழாய்களிலிருந்தும் கிணறுகளி லிருந்தும் தண்ணீரைப் பிடித்து வடிகட்டி கேன்களில் அடைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள் ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 லட்சத்துக்கு மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படு கின்றன.

இதில் நான்கில் ஒரு பகுதி அதாவது 25 விழுக்காடு சுகாதார மற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக அரசு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பேருந்து நிலையங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் தினமும் சோதனை மேற்கொண்டு சுகா தாரமற்ற குடிநீர் பாட்டில்களையும் கேன்களையும் பறிமுதல் செய்து வருகிறோம் என்றார்.

“பொதுமக்களுக்கு வழங்கப் படும் குடிநீர் கேன்கள், பாட்டில்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குடிநீர் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி செய்யப்படும் தேதியை உற்பத்தியாளர்கள் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுத்தமாக வும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினார்.

முக்கியமாக ‘ஐஎஸ்ஐ’ தரச் சான்று, ‘எப்எஸ்எஸ்ஐ’ உரிமம், ஆழ்துளைக் கிணறுகள் வைத் திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

எந்த நிறுவனத்தின் தண்ணீர் கேனில் நிரப்பப்படு கிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும். பொது மக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் என்றும் அதி காரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் குடிநீர் விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!