‘சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து ஸ்டாலின் தண்ணீர் கேட்டு போராடுகிறார்’

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குடிநீர் பிரச்சினைக்கு குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்தை விமர்சித்த தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சிங்கப்பூர் சென்றதற்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றிருந்தால் தண்ணீர் கேட்டுப் பெற்றிருக்கலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“சிங்கார சென்னையை சிங்கப் பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தற்போது சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து தண்ணீர் எங்கே என்று போராடு கிறார். சிங்கப்பூர் சென்றதற்குப் பதிலாகப் பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணிக் கட்சி யான கர்நாடகக் காங்கிரஸ் நீர்ப் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர்த் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம்.

“மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்குப் போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்,” என்று அறிக்கை வாயிலாக தமிழிசை சாடியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!