தமிழகத்திற்கு நீரை முழுமையாக வழங்க ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்திற்கு நீரை முழுமையாக வழங்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி„மேலாண்மை ஆணை யத்தின் 4வது கூட்டம் ஆணை யத்தின் தலைவர் மசூத் உசைன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங் களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக அரசு பிரதிநிதி, காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரையும் ஜூலை மாதம் வழங்கப்பட வேண்டிய 31.24 டிஎம்சி நீரையும் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத் தினார். 

இதற்குப் பதிலளித்த கர்நாடகா பிரதிநிதி, காவிரி„நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இல்லாததால் எங்களுக்கே தண்ணீருக்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித் தார். 

மேலும் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடகா பேசக் கூடாது. மேகதாது விவகாரம் நீதி மன்றத் தீர்ப்பையும் காவிரி„நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் மீறும் வகையில் உள்ளது என்று தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா முறையாக வழங்க ஆணையம் உத்தரவிட்டது. 

“இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. எந்தவொரு முடிவாக இருந்தாலும் அனைத்து மாநிலங்களின் முன்னிலையில், அனைத்து மாநில சம்மதத்துடன்தான் எடுக்கப்படும். கர்நாடகத்தில் கடந்த 20ஆம் தேதி வரை குறைந்த அளவிலேயே மழை பொழிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மற்றும் ஜூலை மாதங் களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.

மழைப்பொழிவின் அடிப்படை யில் நீர் வழங்குவதாகக் கர்நாடகம் உறுதி அளித்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தெரிவித்தார்.

 

Read more from this section

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கியைக் கட்டுப்படுத்தும் 45 நடமாடும் மருத்துவக் குழுவினர். படம்: ஊடகம்

11 Oct 2019

டெங்கியைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழு