மதுரை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தின கரனுக்கும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங் கத் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடி வருகின் றனர்.
இந்த வாக்குவாதம் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவுக்குள் ஈர்ப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் அவரை அதிமுகவில் இணைத் துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், "கொள்கையே இல்லாத அமமுக கட்சிக்கு ஒரு கொள்கை பரப்புச் செயலர் தேவையா என்று?" வினா எழுப்பியவர், அமமுகவை கலைப் பது குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
டிடிவி தினகரன் அரசியல் கட்சித் தலைவர் போல் கண் ணியத்துடன் செயல்படாமல் பயங் கரவாத இயக்கங்களின் தலைவர் போல் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ள தங்க தமிழ்ச்செல் வன், சட்டமன்றத் தேர்தலை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மக்களவைத் தேர்தலிலும் போட்டி யிட்டதுதான் அமமுகவின் தோல் விக்குக் காரணம் என்றும் தெரி வித்துள்ளார்.
"அவரைப் பார்த்தால் நான் பெட்டிப் பாம்பாக அடங்குவேன் என தினகரன் சொல்கிறார். அவர் என்ன சம்பளம் கொடுத்தாரா? எதற்கு அடங்கவேண்டும். அடங்க வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது அசிங்கம். இதனை மக்கள் ரசிக்கமாட்டார்கள்.
"18 எம்எல்ஏக்கள் இல்லாவிட் டால் தினகரன் இல்லை. எம்எல் ஏக்கள் குடும்பத்தினர் வேதனை யில் உள்ளனர்," என்றார்.
இந்நிலையில், அமமுக கட்சிக் கான புதிய நிர்வாகிகள் 29ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்றும் அமமுக கட்சிப் பொறுப்பு களில் இருந்து தங்கத் தமிழ்ச் செல்வன் நீக்கப்படுவார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஜெயக் குமார் கூறுகையில், "தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணை வதற்கு யாரும் தடையாக இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்தைத் தவிர வேறு யார் வந்தாலும் அதி முகவில் ஏற்கப்படுவார்கள்.
"அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டு தான் உள்ளனர். தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம் பித்துவிட்டனர்," என்றார்.
இந்நிலையில், தங்க தமிழ்ச் செல்வனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ்ஸும் அவரது மகன் ரவீந்திரநாத்தும் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர். அதனால்தான் தங்க தமிழ்ச் செல்வன் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மூலம் அதிமுக வில் சேர தூது விட்டுள்ளார்.
இதற்கு பழனிசாமி தரப்பில் சம்மதிக்க முன்வந்தாலும் ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு நீடிக்கிறது. எனவே சில நாட்கள் கழித்து தனது நிலைப்பாட்டை தங்க தமி ழ்ச்செல்வன் தெரிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறினர்.

