சென்னை: தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீர்ப்பஞ்சத்தை வான் மழையால் மட்டுமே போக்கமுடியும் என்று 'டைட்டானிக்' பட நாயகன் லியானார்டோ டி காப்ரியோ தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்துத் தொடர்ந்து கருத்து கூறிவரும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ, சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்தும் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் நிலைகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், சோழ வரம், புழல் ஆகிய ஏரிகள் திகழ்கின்றன. கடந்தாண்டு போதிய பருவ மழை இல்லாததால் இந்த ஏரிகள் எல்லாம் தற்போது முற்றிலும் வற்றி வறண்டு கிடக்கின்றன. இதனால், சென்னை மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லியானார்டோ டி காப்ரியோ தன்னுடைய இன்ஸ்ட கிராம் பதிவில், "இந்த நிலை மையில் இருந்து மழையால் மட்டுமே சென்னை மக்களைக் காப்பாற்ற முடியும். புகைப்படத்தில் உள்ள கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. சென்னை நகரம் கடும் குடிநீர்„ தட்டுப் பாட்டை சந்தித்துள்ளது.
"நான்கு ஏரிகள் வறண்டு போனபிறகு இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது. அரசு விநியோகிக்கும் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உண வகங்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்த தட்டுப்பாட்டைப் போக்க மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து வரு கின்றனர். சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காக சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வரு கின்றனர்," என்று தனது எண் ணங்களைப் பதிவு செய்துள்ளார்.
தண்ணீர்„ தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் டெல்லி, பெங் களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும் இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக் கப்படலாம் என்றும் நிதி ஆயோக் அறிக்கை எச்சரித்துள்ளது.

