'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு'

'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு'

1 mins read

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கு வதற்கு 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் தாக்கல் செய்துள்ள மனுவில் வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மனுவில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள தாகவும் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சமாதா னப்படுத்தவே ஆலையை அரசு மூடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதா ரமும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.