தலைக்கவசம் அணியாமல் வந்த போலிஸ் அதிகாரிக்கு அபராதம்

தலைக்கவசம் அணியாமல் வந்த போலிஸ் அதிகாரிக்கு அபராதம்

1 mins read
c63af3e8-738b-4d3b-a15d-d36db4dbab21
சோதனையில் சிக்கிய போலிஸ் அதிகாரி: படம்: தமிழக ஊடகம் -

கீழ்ப்பாக்கம்: மக்களுக்கு முன்னு தாரணமாக இருக்கவேண்டிய அதிகாரியே பொறுப்பற்று நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அபராதத் தொகை எவ்வளவு என்று ஊட கங்கள் குறிப்பிடவில்லை.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணியாமல் காவல்துறை என 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத் தில் ஒருவர் வந்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகசந்தீப், 28, என்பதும் சிஆர்பிஎப் போலிஸ் அதிகாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலிசார், பூந்த மல்லி நெடுஞ்சாலையில் தலைக் கவசம் அணிவது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.