தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

1 mins read
be28dc59-f31a-43de-baef-f023332efd9b
சென்னை-மதுரை இடையேயான ரயில் சேவையில் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. வரும் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. படம்: ஊடகம் -

ஆலந்தூர்: மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளும் கடும்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் நோக்கி மெட்ரோ ரயில் சென்றபோது, மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் நோக்கிச் செல்லும் மின்கம்பியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ரயிலை மேற்கொண்டு இயக்கமுடியாமல் நிறுத்தப்பட்டது. மீனம்பாக்கத்திலேயே பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லும் ரயில்கள் நங்கநல்லூர் சாலை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டிய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதையடுத்து மெட்ரோ ரயில் நிர்வாகம், நங்கநல்லூர் சாலை ரயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வேன், ஷேர் ஆட்டோக்கள் மூலம் செல்ல நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே, ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் சென்னை-மதுரை இடையேயான ரயில் சேவையில் 10 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. வரும் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. படம்: ஊடகம்