காஞ்சிபுரம் நெம்மேலியில் ரூ.1,689 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலைக்கு முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் பன்னீா்செல்வம் உள்பட அமைச்சா்கள் நேற்று அடிக்கல் நாட்டினா். ரூ.1,689 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் குடிநீரை வழங்கும் என்றும் இது தென்சென்னை மக்களின் குடிநீா் தேவைக்கு பயன்படுத்தப்படும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆலையில் இருந்து கிடைக்கும் நீா் மூலம் வேளச்சேரி, ஆலந்தூா், புனித தோமையாா் மலை, மேடவாக்கம், கோவிளம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூா், மடிப்பாக்கம், உள்ளகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 9 லட்சம் மக்கள் பயன்பெறுவாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

