குளிர் பதனப்பெட்டி வெடித்து தாய், மனைவியுடன் செய்தியாளரும் பலி

குளிர் பதனப்பெட்டி வெடித்து தாய், மனைவியுடன் செய்தியாளரும் பலி

1 mins read

சென்னை: தாம்பரம் அருகே குளிர் பதனப்பெட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் குடும்பத்துடன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

காஞ்சிபுரம் - தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் பிரசன்னா, 32, என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நியூஸ் ஜெ.தொலைக்காட்சியின் சென்னை செய்தியாளராகப் பணியாற்றியவர். இவரது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த சம்பவம் குறித்து சென்னை போலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, "வீட்டுக்குள் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும், குளிர் பதனப்பெட்டி வெடித்துச் சிதறியதால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேதப் பரிசோதனை யின் முடிவில்தான் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்," என்றார்.