தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சி - ஸ்டாலின் சாடல்

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சி - ஸ்டாலின் சாடல்

1 mins read
5e26cf7b-6b38-4d05-8874-bedd527ddee3
-

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயுவை வெளிக்கொணர்வதற்காக 104 இடங்களை விடுவதற்கு இந்திய மத்திய அரசு முடிவு செய்ததை அம்மாநில எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. தமிழ்நாட்டைப் பாலைவனமாக மாற்ற மத்திய அரசாங்கம் முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்த முடிவால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

திரு ஸ்டாலின் மட்டுமின்றி, அமமுக தலைவர் டிடிவி தினகரனும் எரிவாயுத் திட்டங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். கிராமத்து சபை கூட்டங்களைப் பயன்படுத்தி இத்தகையத் திட்டங்களைத் தடுக்குமாறு திரு தினகரன் மக்களிடம் கேட்டுள்ளார்.