சென்னை: தமிழ்நாட்டில் போராட்டங்கள் முழுநேர தொழிலாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்து இருக்கிறது. மாநிலத்தில் இடம்பெறக் கூடிய ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் தமிழ்நாட்டின் பொருளியல் எப்படி செழிக்கும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கடலூரில் போராட்டம் நடத்த தங்கள் கட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கு அனுமதி வேண்டும் என்றும் கேட்டு உயர் நீதிமன்றத்தில் அமமுக நிறுவனர் டிடிவி தினகரன் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் போராட் டங்கள் மலிந்துவிட்டது குறித்து கவலை தெரிவித்தார்.
"தமிழ்நாட்டைப் பார்க்கையில் இப் போது போராட்டங்களும் ஆர்ப்பாட்டங் களும் முழுநேரத் தொழிலாகிவிட்டன.
"மாநிலத்தில் இடம்பெறக்கூடிய ஒவ் வொரு திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம் பினால் தமிழகம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. இதனால் வெளி மாநிலங்கள்தான் பயனடையும்," என்று நீதிபதி குறிப்பிட்டார்.
சில திட்டங்களுக்கு அனுமதி கிடை யாது என்று தமிழக அரசாங்கம் ஏற் கெனவே திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது என்றாலும் அத்தகைய திட் டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவேண்டிய தேவை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் தமிழ்நாடு பாலை வனமாக மாறிவிடும் என்று அமமுக கட்சி தன் மனுவில் தெரிவித்து இருப்பதை நீதிபதி நிராகரித்தார்.
அந்தத் திட்டத்தை மக்கள் எதிர்க்கக் கூடாது என்றும் ஆனால் அந்தத் திட்டம் இடம்பெறக்கூடிய இடங்களை வேண்டு மானால் அவர்கள் எதிர்க்கலாம் என்றும் நீதிபதி யோசனை கூறினார்.
அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்வதால் தான் அத்தகைய போராட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
இளையர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துக் கூறவேண்டும். வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் திட்டங் களை இளையர்கள் எதிர்க்கக் கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.
ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்தால் மாநிலத்தின் முன்னேற்றம் கேள்விக்குறி யாகிவிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.
காவிரி டெல்டா வட்டாரத்தில் எரி வாயுவை எடுப்பதற்காக 104 இடங்களில் கிணறுகளைத் தோண்டி சோதனை நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசாங் கத்தை அணுகி இருக்கிறது.
இதை அமமுக, திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல முக்கிய அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து பல இடங்களில் தொடர் ஆர்ப் பாட்டங்கள் நடந்து வருகின்றன.

