ஈரோடு: ஈரோட்டில் செயல்படும் 'கல்யாணி கிட்னிகேர்' என்ற சிறு நீரகச் சேவை மையத்தின் பெயரில் ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி பொதுமக்கள் பலரிடம் பணமோசடி செய்ததாக நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு பேரை பெங்களூருவில் போலிஸ் கைது செய்தது.
அவர்களிடம் இருந்து ஏராள மான வங்கிக் கணக்குப் புத்தகங் கள், ஏடிஎம் அட்டைகள், கைபேசி கள், மடிக்கணினி, கார் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இருவரும் கல்வி பயில்வதற்கான மாணவர் விசாவில் பெங்களூருவில் தங்கி இருந்ததாகவும் போலிசார் தெரி வித்துள்ளனர்.
சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்தால் ரூ. 3 கோடி அளிக் கப்படும் என்று கல்யாணி கிட்னி கேர் சேவை மையத்தின் பெயரில் ஃபேஸ்புக்கில் வெளியான விளம் பரத்தைக் கண்டு அந்த மையத் திற்குச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு சிறுநீரகங்களையும் தான மாகத் தர முன்வந்து அதற்காக ரூ. 15,000 பதிவுக் கட்டணத்தைச் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அப்படி எந்தவொரு விளம்பரத்தையும் செய்யவில்லை என்று அந்த மையம் மறுத்து விட்டது. இதனையடுத்து அந்தச் சேவை மையம் போலிசை நாடியது.
போலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது. போலியான ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
போலிஸ் எடுத்த தீவிரமான நடவடிக்கையின் விளைவாக கொலின் ஸ்டேன்டி, ஒகோவா ஸ்டீபன் ஃபிராங் என்ற இரண்டு நைஜீரியர்கள் பெங்களூருவில் பிடிபட்டனர்.
மாணவர் விசாவில் தங்கி யிருந்த அந்த இருவரும் பலரையும் ஏமாற்றி பெரும் பணத்தைச் சுருட்டி அந்தப் பணத்தில் பெங்க ளூருவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் புலன்விசாரணை தொடர்வதாக வும் போலிஸ் அதிகாரிகள் தெரி வித்து உள்ளனர்.

