இலவச மடிக்கணினி கேட்டு பல இடங்களிலும் மாணவர்கள் முற்றுகை: அமைச்சர்கள் படாதபாடு

இலவச மடிக்கணினி கேட்டு பல இடங்களிலும் மாணவர்கள் முற்றுகை: அமைச்சர்கள் படாதபாடு

1 mins read

நாகை: தமிழ்நாட்டில் பிளஸ்2 முடித்த 28 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப் படும் என்று தமிழக அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் இதுவரையில் விநியோகம் எதுவும் இடம்பெறவில்லை.

இதைக் கண்டித்து மாநிலத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்து இருக் கிறார்கள். நாகையில் தமிழக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் காரை முற்றுகையிட்ட மாணவிகள், தங்களுக்கு உடனடியாக மடிக் கணினிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.

அதேபோல, திருவண்ணாமலை யில் மாணவர்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தை போலிஸ் விரட்டி யடித்து கலைத்தது. சீர்காழியிலும் மாணவர்கள் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாரதியின் காரை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

கடலூரில் தமிழக அமைச்சர் எம்.சி. சம்பத் வந்த காரை முன் னாள் மாணவர்கள் முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மாணவர்களிடம் படாத பாடுபட்டனர்.

இதனிடையே, 2017=2018ல் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியருக்கு இன்னும் மூன்று மாதங்களில் மடிக்கணினி வழங் கப்பட்டுவிடும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோட் டில் தெரிவித்தார்.