சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் குடிக்க தண்ணீர் கொடுக்கப்படு வதில்லை.
மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் ஒரு தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள் ளும்படி நோயாளிகளிடம் தெரிவிக் கப்படுகிறது. அல்லது அவர்கள் ரூ. 10 கொடுத்து குடிநீரை வாங் கிக் குடிக்கலாம்.
அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்மணியின் கணவரான சங்கரன் என்ற நாட் கூலி ஊழியர் மருத்துவமனையில் கழிவறையில்கூட போதிய தண் ணீர் இல்லை என்றார்.
நோயாளிகளுக்குச் சாப்பாடு கொடுக்க வரும் ஊழியர்கள் "வேண்டுமானால் சாப்பாடு அதிகம் தருகிறோம். ஆனால் தண்ணீர் மட்டும் கேட்காதீர்கள்," என்று கூறிவிடுகிறார்கள்.
நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி அந்த மருத்துவமனையில் வேலை பார்ப் போரும் தங்கள் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
"மருத்துவமனையில் பல இடங் களில் காற்றாடியோ, சன்னல் களோ, குளுகுளு வசதியோ இல்லை. இங்கு சிகிச்சை இலவசம் என்பதற்காக நாங்கள் வருகிறோம். ஆனால் தண்ணீருக்கும் சாப்பாட் டிற்கும் பெரும் பணத்தைச் செல விட வேண்டி இருக்கிறது," என்று நோயாளி ஒருவரின் உறவினரான ராஜேந்திரன் என்பவர் கூறினார்.
குழாயில் வரும் தண்ணீரை முகர்ந்து பார்க்கக்கூட முடிய வில்லை என்றார் அவர்.
"தண்ணீருக்காக நாள் ஒன் றுக்கு ரூ.200 செலவாகிறது. சாப் பாட்டிற்காக ரூ. 300 செலவா கிறது," என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் சகோதர ரைப் பார்த்துக்கொள்ளும் மேரி அருள்குமார் என்பவர் கூறினார்.
இருந்தாலும் மருத்துவமனை யில் குடிநீர் எப்போதுமே இருக் கிறது என்று மூத்த நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் சுத்திகரிக்கப்பட்டு கொடுக்கப்படும் அந்தத் தண்ணீரில் ஒருவித வாடை அடிக்கிறது என்பதால் பலருக்கும் அது பிடிக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

