காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பிரம்மாண்ட சமய விழா

காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பிரம்மாண்ட சமய விழா

2 mins read
acb351f2-3858-4dc0-9975-2efd0af45b80
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள இந்தக் குளத்தில் இருந்துதான் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெளியே வந்து காட்சி தருகிறார். படங்கள்: தமிழக ஊடகம் -

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்கு 48 நாட்கள் காட்சிதரும் விழா இன்று தொடங்குகிறது.

இன்று முதல் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு அருள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விழா காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இந்த ஆண்டு விழாவை யொட்டி சென்ற மாதம் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குளத்திலிருந்து அத்திவரதரை மேலே எடுத்து வரும் சம்பிரதாயங் கள் தொடங்கி பின்னிரவு 2.45 மணிக்கு அத்திவரதர் வெளியே கொண்டு வரப்பட்டு சிறப்பு வழி பாடுகள் நடந்தன.

இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை அத்திவரதர் 30 நாட்கள் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார். காஞ்சிபுரம் முழு வதும் இந்த விழாவையொட்டி பரந்த அளவில் ஏற்பாடுகள் இடம் பெற்று இருக்கின்றன.

சிறப்பு ரயில், பேருந்துகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிவறை வசதிகள், தங்குமிட வசதிகள், இலவச உணவு, தண்ணீர், அன்ன தானம் உள்ளிட்ட பலவும் இந்த ஏற்பாடுகளில் உள்ளடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

பக்தர்கள் வசதிக்காக கோயில் பின்புற கோபுரத்தில் இருந்து உள்ளே செல்லும் வழிவரை நீண்ட வரிசைக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன. ரூ.50 கட்டண வரிசை - ரூ.500-க்கான சிறப்பு வசதி, முக்கிய பிரமுகர்கள் தரி சனத்துக்கான சிறப்பு வரிசை என்று அனைத்து வேலைகளும் மும்முரமாக நடந்துள்ளன.

பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்க அத்திவரதர் கோயில் அலுவலகம் அருகே வசந்த மண் டபத்தில் எழுந்தருளுகிறார்.

வசந்த மண்டபம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப் பட்டு மின்விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன.