இன்று முதல் திரவ எரிவாயு லாரி வேலைநிறுத்தம்

இன்று முதல் திரவ எரிவாயு லாரி வேலைநிறுத்தம்

1 mins read

நாமக்கல்: நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டல திரவ எரிவாயு லாரி உரிமையாளர்கள் சங்கம், திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் மிரட்டல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களில் இருந்து தோம்புகளில் எரிவாயுவை நிரப்பும் மையங் களுக்குச் சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்லும் பணிக்கு இந்த லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் புதிய உடன்பாட்டின்படி இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை எதிர்த்து சங்கம் போராடுகிறது.