சென்னை: தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ள சென்னையில் திரு வல்லிக்கேணி பகுதியில் சூழ் நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு கடைக்காரர் ஒருவர் 1 கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்று அறிவித்து சேவை செய்கிறார்.
இந்த அறிவிப்பை விளம்பரப் படுத்துவதற்காக தனது கடையில் சுவரொட்டிகளை (படம்) அவர் ஒட்டிவைத்து இருக்கிறார்.
சென்னையில் குறிப்பாக திரு வல்லிக்கேணி பகுதியில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் 'எல்லம்மன் மாவுக்கடை' என்ற ஒரு கடையை நடத்தி வரும் கிருஷ்ண ராஜேந் திரன் என்பவர் ஒரு கிலோ மாவு வாங்குவோருக்கு ஒரு குடம் தண்ணீர் இலவசமாகத் தந்து சேவை வழங்கி வருகிறார்.
விலைக்கு வாங்கி இலவசமாக கடைக்காரர் தண்ணீர் தருவது கண்டு மனம் நெகிழ்கிறது என்று வாடிக்கையாளர்கள் பலரும் கடைக்காரரை பாராட்டுகிறார்கள்.

