புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 160 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களின் படகு மீது மோதினர்.
தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இருந்த ஒரு படகு சேதமடைந்தது. அப்படகில் இருந்த மீனவர்களை இலங்கை படையினர் தாக்கினர். மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும் அவர்களை மீட்டு மணமேல்குடி மருத்துவமனையில் சேர்த்தனர்.

