தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச் செயலாளர் மு. சண்முகம், வழக்கறிஞர் பி. வில்சன் ஆகியோர் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் இருந்து 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மேல வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத் ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், ஆர். லட்சுமணன், டி.ரத்தினவேல் (நால்வரும் அதிமுக) ஆகியோரின் பதவிக்காளம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, ஆறு மேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
மேலவைத் தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பார்த்தால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும். இவ்விரு கட்சிகளும் தரப்புக்கு மூன்று வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் படுவர்.
இந்நிலையில், திமுக இரு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் வில்சனுக்கு, முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தர மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடி வெற்றி தேடித் தந்ததில் முக்கியப் பங்குண்டு. இன்னோர் இடத்தை நாடாளுமன்றத் தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு விட்டுத்தந்துள்ளது. மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக் குத் தேர்வு செய்யவேண்டும் என்று காங்கிரஸ், திமுகவிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது காங்கிரசின் கோரிக் கையை நிராகரித்துள்ளார்.
தென்சென்னை மாவட்ட காங் கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உலைவைக்கும் விதமாக பேசியதால் திமுக கொதித்துப்போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கராத்தே தியாக ராஜனின் பேச்சு குறித்து கருத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்றும் காங்கிரஸ்-திமுக கூட்ட ணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

