நாமக்கல்: தென்மண்டல 'கேஸ் டேங்கர்' லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தால் தமிழகம் உள்ள ஆறு தென் இந்திய மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மண்டல 'கேஸ் டேங்கர்' லாரி உரிமையாளர் சங்கத்திற்குச் சொந்தமான 5,600 'டேங்கர்' லாரிகள் ஐஓசி, பிபிசிஎல், எச்பி சிஎல் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலை யங்களில் இருந்து 'எல்பிஜி'யை சிலிண்டர்களில் அடைக்கும் ஆலைகளுக்குக் கொண்டு செல் கின்றன. ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் அந்த லாரிகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அண்மைய ஏலக்குத்தகையில் அவற்றுள் 700 லாரிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதையடுத்து, தங்களது வாழ்வாதாரமும் அந்த லாரிகளின் ஓட்டுநர்களுக்கு வேலையும் பறிபோனதாகக் கூறி, அந்த லாரிகளின் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து, அந்த 700 'டேங்கர்' லாரிகளையும் மீண்டும் இயக்க வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி, கால வரம்பற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

