மதுரை பல்கலையில் போலிச் சான்றிதழ்

மதுரை பல்கலையில் போலிச் சான்றிதழ்

2 mins read
44bed7f4-fb1e-4244-868e-bf09f7306c4a
கோப்புப்படம்: ஊடகம் -

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் போலி யாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட தாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் பிரிவில் பல ஆண்டுகளாகவே முறைகேடு நடப்பதாகப் புகார்கள் கூறப்பட்டு வந்ததை அடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி விசா ரணையில் இறங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2014-15ஆம் கல்வியாண் டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விண்ணப்பங்களில் பெயரைத் தவிர வேறு எந்த விவரங்களும் இல்லாமலேயே மாணவர்கள் பல ருக்குப் படிக்க அனுமதி வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தியதற்கும் தேர்வு எழுதிய தற்கும் எந்த ஆதாரமும் இல்லா மலேயே, அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும் 'புரொவிஷனல்' எனும் இடைக்காலக் கல்வித் தகுதிச் சான்றிதழும் வழங்கப்பட் டதை லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் கண்டுபிடித்தனர்.

இப்படி முறைகேடாகச் சான் றிதழ் வழங்க ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பல்கலைக்கழக ஊழியர்கள் லஞ்சம் பெற்றுள்ள தாகவும் ஒட்டுமொத்தமாகப் பார்க் கையில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதும் தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பாக, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட மூவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத் தினர். போலிச் சான்றிதழ் விவகா ரத்தில் யார் யாருக்குத் தொடர்பு என்ற பட்டியலை அவர்கள் தயா ரித்து வருகின்றனர். இந்த விவ காரத்தில் இன்னும் பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.