வாகனத்தை விரட்டிய சுங்கச் சாவடி ஊழியர் பள்ளத்தில் விழுந்து மரணம்

வாகனத்தை விரட்டிய சுங்கச் சாவடி ஊழியர் பள்ளத்தில் விழுந்து மரணம்

1 mins read

காஞ்சிபுரம்: சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனத்தை விரட்டிப் பிடிக்க முயன்ற சுங்கச் சாவடி ஊழியர் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் நிற்காமல் சென்ற வாகனத்தை ஊழியர்கள் விரட்டிப் பிடித்து, ஓட்டுநரை அடித்து உதைத்து, போலிசிடம் ஒப்படைத்தனர்.

விரட்டிச் சென்றவர்களுள் வினோத் என்பவரைக் காணவில்லை என்பது சிறிது நேரம் கழித்தே தெரியவந்தது. அவர் சாலையின் நடுவே ரயில்வே மேம்பாலத்திற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில் விழுந்து கிடந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அவருக்குத் திருமணமானது குறிப்பிடத்தக்கது.