அமமுகவின் இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்வதாக அறிவிப்பு

அமமுகவின் இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்வதாக அறிவிப்பு

2 mins read
e0af4dee-2bf2-4c53-9ab4-3cc450f0d931
-

சென்னை: முன்னாள் எம்எல்ஏ வும் அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா, விரைவில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கழகமான அதிமுகவில் இணையப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்காசியில் வரும் 6ஆம் தேதி பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் 20,000 ஆதர வாளர்களுடன் அதிமுகவில் இணைய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ள தாகவும் பதற்றம் அவர் முகத் தில் தொற்றியுள்ளதை காண முடிவதாகவும் தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. நாஞ்சில் சம்பத், மைக்கேல் ராயப்பன், செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்செல்வன் ஆகி யோர் அடுத்தடுத்து அமமுக வில் இருந்து விலகி ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க் கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளிலும் இணைந்துவரும் நிலையில், அமமுகவில் இருந்து வேறு சில முக்கிய நிர்வாகிகளும் விரைவில் விலகுவார்கள் என அவர்கள் ஆரூடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் இப்போது இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இணைய உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிடிவி தினகரன் பேச்சால் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். நான் குறைந்த நாட்களே அமைச்சராக இருந்ததாகக் கிண்டல் செய்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவர் மீதான அதிருப்தியின் காரணமாகவே நான் அதிமுகவில் இணைய உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் டிடிவி தினகரன் கூறுகையில், "ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியேபோகிறார்கள் என்றால் அவர்களைத் தடுத்துநிறுத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.

"கட்சி என்பது ஒருமித்த கருத்துடன் அனைவரும் விருப்பப் பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சிக்கு சரிவு என்று வேண்டுமென்றால் நீங்கள் ஊடகங்களில் எழுதிக் கொள்ளுங்கள். "யார் எங்கு சென்றாலும் எங்களுக்குப் பாதிப்பில்லை, நிர்வாகி கள் விலகிச் செல்லச்செல்ல அமமுக கட்சி நன்கு பலப்படும்," என்று கூறியுள்ளார்.