சென்னை: சென்னை மக்களின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையைப் போக்க பலத்த மழை ஒன்றே தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்ய பிரார்த்தனை செய்யும் விதமாக நேற்று சென்னையில் 150க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்றாக சேர்ந்து சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை படைத்தனர்.
அனைத்துலக கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடகக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழை தரக்கூடிய ராகமான அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட கர்நாடக இசை ராகங்களை அவர்கள் பாடினர்.
https://www.washingtonpost.com/resizer/kSTss-_LL2pkQhaeQtdGkMUFbNA=/1484x0/arc-anglerfish-washpost-prod-washpost.s3.amazonaws.com/public/AYLAG4YH75CUPFY2YA3PN4AYZ4.gif
நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த இசை நிகழ்ச்சி இரவு 9 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
தமிழகத்தில் மழை இல்லாமல் நிலவும் கடும் வறட்சி காரணமாக அண்மையில்தான் அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்கள் தோறும் வர்ண யாகம் நடத்தப்பட்டது. அதே வேளையில் திமுகவினர் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து தண்ணீர் பிரச்சினைக்கு அதிரடி தீர்வு காணக் கோரி போராட்டம் நடத்தினர்.

