சென்னை: குடிநீர் பற்றாக் குறைக்கு வேறு யாரும் காரணமல்ல, முழு முக்கிய காரணம் திமுகதான். வேலியே பயிரை மேய்ந்த கதையாய் இப்போது போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கப் பதிவில், "குடிநீர் பற்றாக்குறைக்குத் திமுக தான் காரணம் என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.
"திமுக 67ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே இதற்கு காரணம். சென்னை மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிக்கப் பட்டுள்ளன.
"நீர்நிலையின் மீதுதான் மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

