மழை பெய்ய பிரார்த்தித்து 150 பேர் இசை நிகழ்ச்சி

மழை பெய்ய பிரார்த்தித்து 150 பேர் இசை நிகழ்ச்சி

1 mins read
6aac57d9-3f98-434d-99e9-b0ddebe8b353
மழை பெய்யவேண்டி சென்னை தியாகராய நகரில் உள்ள சிருங்கேரி மடத்தில் 150க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் நேற்று இசைநிகழ்ச்சி படைத்தனர். அனைத்துலக கர்நாடக இசைக் கலை ஞர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடகக் கலை ஞர்கள் சுதா ரகுநாதன், பாம்பே சகோதரிகள், நித்யஸ்ரீ மகாதேவன் (படம்), அருணா சாய்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச் சினையைப் போக்க பலத்த மழை ஒன்றே தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்ய பிரார்த்தனை செய்யும் விதமாக நேற்று சென்னையில் 150க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றைப் படைத்தனர்.

மழை தரக்கூடிய ராகமான அமிர்தவர்‌ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட கர்நா டக இசை ராகங்களை அவர்கள் பாடினர்.

நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த இசை நிகழ்ச்சி இரவு 9 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

தமிழகத்தில் மழை இல்லாமல் நிலவும் கடும் வறட்சி காரணமாக அண்மையில்தான் அதிமுக சார் பில் பல்வேறு மாவட்டங்கள் தோறும் வர்ண யாகம் நடத்தப் பட்டது. அதே வேளையில் திமுக வினர் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து தண்ணீர் பிரச் சினைக்கு அதிரடி தீர்வு காணக் கோரி போராட்டம் நடத்தினர்.