சென்னை: முன்னாள் எம்எல்ஏ வும் அமமுகவின் முக்கிய நிர் வாகியுமான இசக்கி சுப்பையா, விரைவில் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்க்கழகமான அதிமுகவில் இணையப்போவ தாக அறிவிப்பு வெளியிட்டுள் ளார்.
"தென்காசியில் வரும் 6ஆம் தேதி பிரம்மாண்ட விழா நடை பெறுகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் 20,000 ஆதர வாளர்களுடன் அதிமுகவில் இணைய உள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அம்மா மக் கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தின கரன் அதிர்ச்சி அடைந்துள்ள தாகவும் பதற்றம் அவர் முகத் தில் தொற்றியுள்ளதைக் காண முடிவதாகவும் தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
நாஞ்சில் சம்பத், மைக்கேல் ராயப்பன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடுத்தடுத்து அமமுகவில் இருந்து விலகி ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளிலும் இணைந்து வரும் நிலையில், அமமுகவில் இருந்து வேறு சில முக்கிய நிர்வாகிகளும் விரைவில் விலகுவார்கள் என அவர்கள் ஆருடம் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இப்போது இசக்கி சுப்பையாவும் அதிமுகவில் இணைய உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், "டிடிவி தினகரன் பேச் சால் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். நான் குறைந்த நாட்களே அமைச்சராக இருந்த தாகக் கிண்டல் செய்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவர் மீதான அதிருப்தி காரணமாகவே நான் அதிமுகவில் இணைய உள் ளேன்," என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் டிடிவி தினகரன் கூறுகையில், "ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங் களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை.
"கட்சி என்பது ஒருமித்த கருத்துடன் அனைவரும் விருப்பப் பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தினகரன் கட்சிக்குச் சரிவு என்று வேண்டுமென்றால் நீங்கள் ஊடகங்களில் எழுதிக் கொள்ளுங்கள்.
"யார் எங்கு சென்றாலும் எங்க ளுக்குப் பாதிப்பில்லை, நிர்வாகி கள் விலகிச் செல்லச்செல்ல அமமுக கட்சி நன்கு பலப்படும்," என்று கூறியுள்ளார்.

