நிர்மலா: 'முத்ரா' கடன் மோசடி தமிழகத்தில்தான் அதிகம்

நிர்மலா: 'முத்ரா' கடன் மோசடி தமிழகத்தில்தான் அதிகம்

1 mins read

புதுடெல்லி: பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வங்கிகளில் உள்ள 2,313 கணக்கு களில் மோசடி நடந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் முத்ரா கடன் குறித்து நிர்மலா பேசுகையில், "முத்ரா கடன் திட்டம் தொடங் கப்பட்டு கடந்த ஜூன் 21ஆம் தேதி வரையில் ரூ.19 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட் டுள்ளது. இவற்றில் தமிழத்தில் தான் அதிகபட்சமாக 344 மோசடி கள் நடந்துள்ளன. அடுத்தது சண்டிகரில் 275 மோசடிகளும் ஆந்திராவில் 241 மோசடிகளும் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.