புதுடெல்லி: உள்ளாட்சித் தேர் தலை நடத்துவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து இரு வாரத்திற்குள் பதிலளிக்கு மாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன் என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, "மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளோம்," என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

